ஜூலை 20-ம் தேதி கோவையில் நடைபெற்ற 'உடல் பருமன்' கருத்தரங்கம்

Image

உடல் பருமன் காரணமாக உலக அளவில் பல கோடி பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், எலும்பு பலவீனம் உள்ளிட்ட பல உபாதைகளுக்குக் காரணமாக விளங்கும் உடல் பருமன் ஒரு நோய் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடல் பருமனுக்கான சிகிச்சை பெற அந்நாடுகளில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறுகின்றனர். ஆனால், இந்தியாவில் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் திட்டம் மூலம் உடல் பருமன் குறித்து பல கட்ட விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோயமுத்தூரில் செயல்படும் கோவை மெடிக்கல் சென்ட்டர் அண்ட் ஹாஸ்பிடல்ஸ் மருத்துவர்கள் பங்கேற்கும் உடல் பருமன் கருத்தரங்கம் 20.07.2018 அன்று நடைபெற்றது.

கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், என்ஜிபி கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். டாக்டர் கிருஷ்ண சாமிநாதன், டாக்டர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று, உடல் பருமன் என்றால் என்ன என்பது குறித்தும், அதனால் எதிர்கால சமுதாயம் எதிர்கொள்ளவுள்ள மருத்துவ உபாதைகள் குறித்தும் விரிவாக விளக்கினர். தொடர்ந்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. இக்கருத்தரங்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்ததாக கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Add new comment