Active Members

INIYAVAN

கடற்படையில் தொழில்நுட்பப் பிரிவு அலுவலராகச் சென்னையில் பணியாற்றும் இனியவன், பட்டிமன்றப் பேச்சாளராகவும், சிறந்த மக்கள் பணியாளராகவும் செயல்பட்டுவருகிறார். தஞ்சையில் ஜுன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கல்வி உதவி அளிக்கும் நிகழ்ச்சியில் இவரது பங்கு மகத்தானது. 1,000 மாணவர்களுக்கு மதிய உணவு உண்பதற்கான தட்டுக்களும், டம்ப்ளர்களும் தேவைப்படுவதாக இவரிடம்  தெரிவித்த உடனேயே, சவுதி அரேபியாவில் வசித்து வரும் பிரேம்நாத் அவர்களைத் தொடர்புகொண்டு, தட்டுக்கள் மற்றும் டம்ப்ளர்கள் அளிக்க உதவினார். அது மட்டுமல்லாமல், தஞ்சாவூருக்கே நேரில் வந்து, விழாவிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். ஏழை மாணவர்கள் மீதான அவரது ஆர்வம், மற்றவர்களுக்கும் ஒரு தூண்டுகோளாக அமைந்துள்ளது என்பதே உண்மை.

Thiyagajothiramalingam

தஞ்சாவூரைச் சேர்ந்த தியாகஜோதி ராமலிங்கம் ஐய்யா, மக்கள் பணியாற்றுவதில் எப்போதும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தற்போது முழு நேர மக்கள் பணியாளராகத் திகழ்கிறார். தள்ளாத வயதிலும் ஓடியாடி அவர் பணியாற்றுவது தஞ்சை நகரில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு ஆதரவற்றோர் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு உதவிகளைப்பெற்றுத் தந்ததிலும், அதற்கான நிகழ்ச்சியை நடத்தியதிலும் பெரும் பங்காற்றிய தியாகஜோதி ராமலிங்கம் அவர்களின் பணி மகத்தானது.