Active Members

Dr. S. Preethi

மதுரையில் வசிக்கும் டாக்டர் எஸ். ப்ரீத்தி, நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து செயல்படுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். கேரள வெள்ள நிவாரணப் பணிகளை அன்பு பாலம் திட்டத்தின் மூலம் தொடங்கியவுடன், 5,000 ரூபாய் மதிப்புள்ள 17 பை அரிசியை அன்பளிப்பாக அளித்தார். மேலும், அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்குப் பல்வேறு சேவைகளை அளிக்கவும் உறுதியளித்துள்ளார். 

Vijayalakshmi K

திருமதி விஜயலட்சுமி அவர்கள் தமிழக வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவரது கணவர் கணபதி ஏற்கனவே காலமான நிலையில், சென்னை அஸ்தினாபுரத்தில் தனியாக வசித்துவருகிறார். நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் திட்டத்தின் மூலம் கேரள வெள்ள நிவாரணப் பணிகள் தொடங்கியவுடன் மிகுந்த ஆர்வத்துடன் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து பத்தாயிரம் ரூபாய் பெருமானமுள்ள உதவிப்பொருட்களை மனமுவந்து அளித்து உதவினார். மேலும் உதவிகள் தேவைப்படும் போது தெரிவித்தால் உதவத் தயார் என புன்சிரிப்புடன் கூறும் இவர், தள்ளாத வயதிலும் பிறருக்கு உதவத் துடிப்பது ஆச்சரியமளிக்கும் விதத்தில் உள்ளது.

Writer N. C. Mohandhass

எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் குவைத்தில் பணியாற்றிவருகிறார். இண்டியன் ஃப்ரண்ட்லைனர்ஸ் சர்வீஸ் ஆர்கனைசேஷன் (Indian Frontliners Service organisation ) என்ற அமைப்பை நிறுவி, அதன் ஒருங்கிணைப்பாளராகப் பதவி வகித்துவருகிறார். குவைத்தில் வசித்துவரும் தமிழர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்த அமைப்பின் மூலம் வழங்கிவருகிறார். சென்னை வந்திருந்த போது, மூன்று மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ. 41,000/- வழங்கி உதவினார். துயரில் பரிதவிப்போருக்கு எப்போதும் உதவத் தயார் என்ற அவரது ஆர்வம் உண்மையில் வியப்பை ஏற்படுத்துகிறது.

Flaring Formulations

அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து செயலாற்றும் Flaring Formulations (P) Ltd., சென்னையில் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியை, உதவிக்காக ஏங்குபவர்களுக்கு அன்பு பாலம் மூலம் அளித்துவருகிறது. இந்த ஆண்டின் ஜுலை மாதம், சென்னையில் கல்லூரிக் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவர் ஒருவருக்கு இருபதாயிரம் ரூபாயை இந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் எஸ். ஆர். விஷ்ணுகோபி அவர்கள் மனமுவந்து அளித்துள்ளார். அவருடைய இச்செயல், எதிர்காலக் கனவுகளுடன் கல்லூரிக்குள் நுழையும் ஒரு மாணவனுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.