Active Members

J.Prakash

தமிழ் நாடு சிறப்பு காவல் படையில் காவலராகப் பணியாற்றும் ஜெ. பிரகாஷ், 1,800 ரூபாய் மதிப்பிலான உதவிப்பொருட்களை கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக வழங்கி உதவினார். நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

AZEES

மதுக்கரையைச் சேர்ந்த அஜீஸ், கேரள வெள்ள நிவாரணத்துக்கு உதவும் நோக்கில் 25 ஆயிரம் ரூபாய்க்கு, கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வரைவோலை பெற்று அதை கோவையில் உள்ள நியூஸ் 7 தொலைக்காட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார். 'அன்பு பாலம்' திட்டத்துடன் இணைந்து, தொடர்ந்து மக்கள் பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Yugendran Kamaraj K

சென்னையைச் சேர்ந்த யுகேந்திரன் காமராஜ், கேரள வெள்ள நிவாரணத்திற்காக நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் திட்டத்தின் பணிகள் குறித்துக் கேள்விப்பட்ட உடனேயே நமது அலுவலகத்துக்கு நேரில் வந்து, அவரது தந்தையுடன் இணைந்து தம்மையும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். கேரள நிவாரணத்திற்காக உதவிப்பொருட்கள் நமது அலுவலகத்தில் குவிந்ததைப் பார்த்த அவர் உடனே 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 500 கிலோ அரிசியை மனமுவந்து வாங்கி அளித்தார். துன்பத்தில் அல்லல் படும் சக மனிதனுக்கு உதவ அவர் காட்டிய வேகம் மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. வடசென்னையில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு மாதம் தோறும் இது போன்ற உதவிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கும் அவர், அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து மேலும் பல சமூகப் பணிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

M. Parthiban

சூரத்தில் தொழில் செய்து வரும் எம். பார்த்திபன், கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 சேலைகளை இலவசமாக அனுப்பினார். அவர் அனுப்பிய சேலைகள் அனைத்தும் கேரள மாநிலம் ஆலுவா நகரில் உள்ள ஹிண்டால்கோ தொழிற்சங்க முகாமில் வழங்கப்பட்ட பொருட்களுடன் இணைந்து வழங்கப்பட்டன. அவரது சமூக ஆர்வம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.