2018-ல் அன்பு பாலம்

தஞ்சையில் 1,000 மாணவர்களுக்கு உதவி

தஞ்சையில் அரசு ஆதரவற்றோர் பள்ளியில் கல்வி பயிலும் 95 மாணவர்கள் உள்ளிட்ட, அரசு உதவிபெறும் 9 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டன. 


மாணவர்கள் மதிய உணவு உண்பதற்காக ஆயிரம் தட்டுக்கள், டம்ளர்கள், பள்ளிகளுக்கு 20 ஸ்டீல் பெஞ்சுகள், அலமாரி, டேபிள், சத்துணவு சமையல் பாத்திரங்கள்,  ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் தன்னார்வல அமைப்பான ஆத்மா அறக்கட்டளைக்கு ரூ. 30,000 மதிப்பிலான ஸ்ட்ரெட்சர், ஏழை பெண் ஒருவருக்கு இலவச தையல் இயந்திரங்கள் அளிக்கப்பட்டன. இதற்காக ஜுன் மாதம் 23-ம் தேதி தனியாக ஒரு விழா நடத்தப்பட்டது.