2018-ல் அன்பு பாலம்

சென்னையில் மகளின் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத தந்தைக்கு உதவி

உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மகளின் கல்விக் கட்டணத்தை தந்தை செலுத்தாததால் பள்ளியிலிருந்து நீக்கும் அவலம் ஏற்பட்டது. அந்த மாணவியின் தந்தைக்கு, கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவரிடம் இருந்து ரூ. 10,000 பெற்றுத்தரப்பட்டது. இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட சென்னை மணலியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்.