2018-ல் அன்பு பாலம்

உடுமலை மாணவிக்கு கல்வி உதவி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி, மூன்று ஆண்டுகளாக கல்விக் கட்டணம் செலுத்தாததால் சான்றிதழ்களைப்பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து அன்பு பாலம் வழியாக மாணவியின் பெற்றோர் உதவிகோரினர். உடனடியாக பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரனிடம் பேசி கல்விக் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகள் அந்த மாணவி இலவசமாகக் கல்வி பயில ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.