2018-ல் அன்பு பாலம்

கோவை மாவட்ட மாணவருக்கு உதவி

கோவை மாவட்டம் கப்பளாங்கரை கிராமத்தைச் சேர்ந்த சி. ராஜன் என்ற மாணவரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. அவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், கல்விக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக அந்த மாணவர் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அவருக்கு கல்விக் கட்டணமாக ரூ. 10,000/- அளிக்கப்பட்டது. இந்த உதவியை அன்பு பாலம் வழியாக பே பால் நிறுவனம் அளித்தது.