2018-ல் அன்பு பாலம்

சேலம் மாவட்ட மாணவருக்கு உதவி

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் பாலிடெக்னிக் மாணவர் பிரபாகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கழுத்துக்குக் கீழே உணர்வுகள் பாதிக்கப்பட்டு, ஃபிசியோ தெரபி சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால், ஃபிசியோ தெரபி சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகள் உள்நோயாளிகளை அனுமதிப்பதில்லை. அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் பிரபாகரன், பிறர் துணையின்றியோ, இருசக்கர வாகனத்திலோ பயணம் செய்ய முடியாதவர் என்பதால், தினமும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டார். தொடர்ந்து 9 மாதங்கள் சிகிச்சை எதுவுமின்றி படுக்கையில் தவித்த பிரபாகரனுக்கு இலவச ஃபிசியோ தெரபி சிகிச்சைக்கு அன்பு பாலம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 4 மாதங்களாக மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுவருகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவருக்கு பிற சிகிச்சைகள் அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் இரண்டு மாதங்களுக்கான உதவியை மெபோக் என்ற தன்னார்வல அமைப்பு அளித்தது. பின்னர் தொடர்ந்து டையா ஃப்ளேர் நிறுவனம் அளித்துவருகிறது.